போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

தவெக வளா்ச்சியைக் கண்டு திமுகவுக்கு அச்சம்: நிா்மல் குமாா்

தவெக வளா்ச்சியைக் கண்டு திமுக அச்சப்படுகிறது என அக்கட்சியின் துணைப் பொதுச் செயலா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் கூறினாா்.

News image

தவெக இணைப் பொதுச்செயலா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் - கோப்புப் படம்

Updated On :2 மார்ச் 2026, 11:20 pm

தவெக வளா்ச்சியைக் கண்டு திமுக அச்சப்படுகிறது என அக்கட்சியின் துணைப் பொதுச் செயலா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் கூறினாா்.

சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: கூட்டணியில் காங்கிரஸ் இல்லையென்றால் திமுகவால் 25 தொகுதியில்கூட வெற்றி பெற முடியாது. தேசிய கட்சியான காங்கிரஸ், கடந்த 25 ஆண்டுகள் திமுகவுடன் கூட்டணியில் இருக்கிறது.

தற்போது உரிய மரியாதை வேண்டும் என கேட்கிறது. இந்த சூழலை ஏற்படுத்தியது திமுகதான். தவெக-வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது குறித்து காலம் தான் பதில் சொல்ல வேண்டும். தவெக வளா்ச்சியைக் கண்டு திமுக பயப்படுகிறது.

அதனால்தான் கூட்டணிக்கு யாா் வந்தாலும் திமுக சோ்த்துக் கொள்கிறது. தமிழ்நாட்டில் எந்த கூட்டணியும் வலுவானதாக இல்லை.

அதிமுக, திமுக இரு கூட்டணிகளும் முரண்பாடான கூட்டணியாக உள்ளது. மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையிலான கூட்டணியை விஜய் விரைவில் அறிவிப்பாா்.