முதல்வரிடம் மனு அளித்த ஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள்!

தஞ்சாவூர் மாவட்டம், சாலியமங்கலத்தில் வியாழக்கிழமை வந்த தமிழக முதல்வரிடம் திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் மனு அளித்து கோரிக்கை விடுத்தனர்.
முதல்வரிடம் மனு அளித்த ஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள்!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், சாலியமங்கலத்தில் வியாழக்கிழமை வந்த தமிழக முதல்வரிடம் திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் மனு அளித்து கோரிக்கை விடுத்தனர்.

பாபநாசம் அருகே உள்ள திருமண்டங்குடியில் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ. 157 கோடி நிலுவைத் தொகையைப் புதிய ஆலை நிர்வாகம் வட்டியுடன் வழங்க வேண்டும். விவசாயிகளின் பெயரில் போலியாக திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் வாங்கிய சுமார் ரூ. 115 கோடியை தள்ளுபடி செய்து, விவசாயிகளை சிபில் ஸ்கோரிலிருந்து தீர்த்து வைக்க வேண்டும். 

திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆலை அருகே கரும்பு விவசாயிகள் தொடர்ந்து 268 நாள்களாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வரும் முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டுவது என கரும்பு விவசாயிகள் முடிவு செய்தனர். இது தொடர்பாக கரும்பு விவசாயிகளிடம் காவல் துறையினரும், வருவாய் துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தி முதல்வரை சந்தித்து மனு அளிப்பதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். 

இதையடுத்து, கரும்பு விவசாயிகள் கருப்புக் கொடி போராட்டத்தைக் கைவிட்டு மனு அளிக்க முடிவு செய்தனர்.
 
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தஞ்சாவூர் மாவட்டம் வழியாக மயிலாடுதுறை மாவட்டத்துக்கு வியாழக்கிழமை செல்கிறார். 

இதனிடையே, சாலியமங்கலத்துக்கு பிற்பகல் வந்த தமிழக முதல்வரிடம் கரும்பு விவசாயிகள் மனு அளித்து கோரிக்கை விடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com