போலி காசோலை செலுத்தி கடவுளுக்கே ஷாக் கொடுத்த பக்தர்!

போலி காசோலை செலுத்தி கடவுளுக்கே ஷாக் கொடுத்த பக்தர்!

ஆந்திர கோயிலில் போலி காசோலை கொடுத்து கடவுளுக்கே அதிர்ச்சி கொடுத்த பக்தரை போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர். 

ஆந்திர கோயிலில் போலி காசோலை கொடுத்து கடவுளுக்கே அதிர்ச்சி கொடுத்த பக்தரை போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர். 

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் சிம்மாசலம் அப்பாண்ணா வராஹலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ளது. பிரபல வைணவ கோயில்களில் ஒன்றான இங்கு 15 நாள்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, உண்டியல் காணிக்கை எண்ணும்போது, உண்டியலில் இருந்து காசோலை ஒன்றை இருப்பதை எடுத்து பார்த்துள்ளனர். அதில் ரூ.100 கோடி கோயில் பெயரில் காணிக்கையாக எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். 

கோயில் வரலாற்றில் இல்லாத வகையில் பக்தர் காணிக்கை செலுத்தியுள்ள சம்பவத்தால் அதிகாரிகள் சந்தேகமடைந்து விசாரித்தனர். பொட்டேபள்ளி ராதாகிருஷ்ணாவின் சேமிப்பு கணக்கு காசோலை என தெரியவந்தது. எம்.பி.பி டபுள் ரோடு கிளையின் பெயரிலிருந்த காசோலையில் வராஹ லட்சுமி நரசிம்ம தேவஸ்தானம் என்ற பெயரில் முதலில் ரூ.10 என்றும் பிறகு, அதை அடித்து ரூ.100 கோடி என்றும் எழுதப்பட்டிருந்தது. 

உடனே அதிகாரிகள் வங்கிக்குச் சென்று பொட்டேபள்ளி ராதாகிருஷ்ணாவின் சேமிப்பு கணக்கு குறித்து தகவல்களை சேகரித்தனர். அப்போது அவரது கணக்கில் ரூ.17 மட்டும் இருப்பு இருந்தது தெரிய வந்தது. 

காசோலையைக் காணிக்கையாக போட்டவரின் தகவல்களை கண்டறியும் முயற்சியில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். கோயில் உண்டியலில் மோசடி செய்த நபரின் செயலால் பக்தர்களும், நிர்வாகத்தினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com