மேட்டூர் அணை நீர்வரத்து 3,423 கன அடி!

காவிரி டெல்டா பாசனத்திற்கு  திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 8,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. 
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
மேட்டூர் அணை (கோப்புப் படம்)


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,423 கன அடியாக சரிந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 54.42 அடியிலிருந்து 53.70 அடியாக சரிந்தது. அணைக்குவரும் நீரின் அளவு வினாடிக்கு 6,266 கன அடியிலிருந்து 3,423 கன அடியாக சரிந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு  திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 8,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 20.22டிஎம்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com