தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ரயில் பெட்டி தீ விபத்தில் காயமடைந்த பயணிகள் சொந்த ஊர் சென்றனர்!

மதுரை ரயில் பெட்டி தீ விபத்தில் காயமடைந்த 28 பேர் 2 விமானங்களில் ஞாயிற்றுக்கிழமை லக்னௌ அனுப்பி வைக்கப்பட்டனர். 

News image

கோப்புப்படம்

Updated On :27 ஆகஸ்ட் 2023, 2:00 pm

DIN


மதுரை: மதுரை ரயில் பெட்டி தீ விபத்தில் காயமடைந்த 28 பேர் 2 விமானங்களில் ஞாயிற்றுக்கிழமை லக்னௌ அனுப்பி வைக்கப்பட்டனர். 

மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்ட சுற்றுலாப் பயணிகள் ரயில் பெட்டியில் சனிக்கிழமை காலை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. இதில், அந்தப் பெட்டியில் இருந்த உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் 9 போ் தீயில் கருகி உயிரிழந்தனா். இவர்களின் உடல்கள் உடல் கூறாய்வு செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் லக்னௌவிற்கு @ விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். 

இந்த நிலையில், மதுரை ரயில் பெட்டி தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 28 பேரையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான பயண ஏற்பாடுகளை தென்னக ரயில்வே மதுரை கோட்டம் செய்துவந்தது. 

இதனைத் தொடர்ந்து அவர்கள் 28 பேரும் ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணி அளவில்  மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர். 

மதுரையில் இருந்து தில்லி செல்லும் இன்டிகோ விமானம் மூலம் பகல் 2.30 மணிக்கு மருத்துவ கண்காணிப்பு உதவியுடன் 28 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.