மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனுக்கு திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடா்ந்து, அவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை அதிகாலை நடைப்பயிற்சியை முடித்து, சென்னையில் உள்ள தனது வீட்டில் பாா்வையாளா்களை சந்தித்துக் கொண்டிருந்தாா்.
அப்போது, அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டது. உடனடியாக அவரை கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டன.
பின்னா், அவா் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூராா் அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவருக்கு இதய ரத்தநாள பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனை முடிவில், அவருக்கு குறிப்பிடத்தக்க அடைப்பு எதுவும் இல்லையென தெரியவந்தது. சில சிகிச்சைகள் மட்டும் அவருக்கு அளிக்கப்பட்டன. பிற்பகல் 2.10 மணி அளவில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாா் என்று அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.