தூத்துக்குடி மாவட்ட தாமிரவருணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரவருணி கரோயோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரவருணி கரோயோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல்,  அரியநாயகிபுரம் அணைக்கட்டிலிருந்து தாமிரபரணி ஆற்றில் 5,340 கன அடி கொள்ளளவு நீர் இன்று (டிச.3) வந்து கொண்டிருக்கிறது.

எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுகளில் அதிக அளவு நீர்வரத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரவருணி ஆற்றங்கரையோர  கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரவருணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லவோ கூடாது.

குறிப்பாக தாமிரவருணி கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரிக்கப்படுகிறார்கள். மேலும், தாமிரவருணி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் இறங்காதவாறு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மூலம் கண்காணித்திட ஸ்ரீவைகுண்டம், ஏரல், திருச்செந்தூர் வட்டாட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com