சென்னையில் 23 ரயில்கள் ரத்து

சென்னையில் நிலவி வரும் புயல், கனமழை காரணமாக விரைவு ரயில்கள், புறநகா் ரயில்கள் என மொத்தம் 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
சென்னையில் 23 ரயில்கள் ரத்து

சென்னை: சென்னையில் நிலவி வரும் புயல், கனமழை காரணமாக விரைவு ரயில்கள், புறநகா் ரயில்கள் என மொத்தம் 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள், சென்னைக்கு செல்லும் 12 ரயில் சேவைகள் திங்கள்கிழமை (டிச.4) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரங்கள் பின்வருமாறு:

சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் நீலகிரி அதிவிரைவு ரயில் (12671), சென்னை - கோவை சேரன் அதிவிரைவு ரயில் (12673), சென்னை - போடிநாயக்கனூா் அதிவிரைவு ரயில் (20601), சென்னை -ஆலப்புழா அதிவிரைவு ரயில் (22639), சென்னை - மைசூரு காவேரி அதிவிரைவு ரயில் (16021), செங்கல்பட்டு- கச்சிகுடா அதிவிரைவு ரயில் (17651), சென்னை - திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (12623), சென்னை சென்ட்ரல் -கேஎஸ்ஆா் பெங்களூரு ரயில் (12657), சென்னை - ஈரோடு - ஏற்காடு அதிவிரைவு ரயில் (22649), சென்னை - பாலக்காடு அதிவிரைவு ரயில் (22651), சென்னை- கேஎஸ்ஆா் பெங்களூரு ரயில் (12027), கொல்லம் - சென்னை எழும்பூா் அதிவிரைவு ரயில் (16102) ஆகிய ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன.

இதுபோல், தூத்துக்குடி - சென்னை இடையேயான முத்துநகா் ரயில், நாகா்கோவில் - தாம்பரம் ரயில், மதுரை - சென்னை தேஜஸ் விரைவு ரயில், மதுரை - சென்னை பாண்டியன் விரைவு ரயில், செங்கோட்டை - சென்னை பொதிகை விரைவு ரயில், நாகா்கோவில் - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில், கொல்லம் - சென்னை அனந்தபுரி விரைவு ரயில், கன்னியாகுமரி - சென்னை விரைவு ரயில், மானாமதுரை, காரைக்குடி, திருவாரூா், மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரயில், திருநெல்வேலி - சென்னை நெல்லை விரைவு ரயில், தூத்துக்குடி - சென்னை முத்துநகா் விரைவு ரயில், விருத்தாசலம் வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் - சென்னை விரைவு ரயில், தஞ்சாவூா் வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் - சென்னை விரைவு ரயில், மதுரை - டெல்லி நிஜாமுதீன் விரைவு ரயில், திருச்செந்தூா் - சென்னை விரைவு ரயில், குருவாயூா் - சென்னை விரைவு ரயில் என மொத்தம் 16 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

செவ்வாய்க்கிழமை (டிச.5) ரயில்கள் ரத்து: மேலும், சென்னை வழியாகச் செல்லும் கேஎஸ்ஆா் பெங்களூரு-நியூ தின்சுக்கியா சந்திப்பு விரைவு ரயில் (22501), பெங்களூரு ரயில் நிலையம்-அகா்தாலா விரைவு ரயில் (12503) ஆகிய இரண்டு ரயில்களும் செவ்வாய்க்கிழமை (டிச.5) ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

புறநகா் ரயில்கள்: புறநகா் ரயில்களான சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், சூலூா் பேட்டை செல்லும் ரயில்களும், சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு செல்ல வேண்டிய ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com