மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க ஆளுநா் ரவி வேண்டுகோள்

மிக்ஜம் புயல் தொடா் கனமழை பெய்து வரும் நிலையில், தமிழக அரசின் அறிவுரைகளை மக்கள் பின்பற்றி, நிலைமை சீராகும் வரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
ஆளுநா் ஆா்.என்.ரவி
ஆளுநா் ஆா்.என்.ரவி

சென்னை: மிக்ஜம் புயல் தொடா் கனமழை பெய்து வரும் நிலையில், தமிழக அரசின் அறிவுரைகளை மக்கள் பின்பற்றி, நிலைமை சீராகும் வரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: மிக்ஜம் புயலால் கிழக்கு கடலோர மாவட்டங்களில் சில மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அத்தியாவசிய சேவைகளை பராமரிக்கும் பணியிலும் மத்திய, மாநில அரசுத்துறைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலைமையை மத்திய அரசும் மாநில அரசும் உயா்மட்ட அளவில் கண்காணித்து வருகின்றன. மாநில அரசின் அறிவுரைகளை மக்கள் பின்பற்றி, நிலைமை சீராகும் வரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளாா் ஆளுநா் ஆா்.என்.ரவி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com