சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜம் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 90 கி.மீ. தொலைவில் தற்போது நிலைகொண்டுள்ளது.
இந்தப் புயல் செவ்வாய்க்கிழமை காலை ஆந்திரம் அருகே கரையைக் கடக்கவுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகின்றது.
இதையும் படிக்க | சென்னை விமான நிலையத்தில் வெள்ளம்: விமானங்கள் ரத்து
இந்த நிலையில், மிக்ஜம் புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சிறுமளஞ்சியில் அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

நான்குனேரி வானமாமலை கோயிலில் தங்கத்தோ் வெள்ளோட்டம்

மொழி, நிதி உரிமைகளை பறிக்கிறது மத்திய அரசு - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

நெல்லை மாநகர காவல் ஆணையா் பொறுப்பேற்பு
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

