கமல்ஹாசன் (கோப்புப்படம்)
கமல்ஹாசன் (கோப்புப்படம்)

அரசை குறை கூறும் நேரம் இதுவல்ல: கமல்ஹாசன் பேட்டி

மக்களுக்கு என்ன செய்வது என்பதுதான் தற்போதைய பணியே தவிர அரசை குறை கூறுவது அல்ல என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

மக்களுக்கு என்ன செய்வது என்பதுதான் தற்போதைய பணியே தவிர அரசை குறை கூறுவது அல்ல என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருள்களை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்திலிருந்து வாகனங்களில் அனுப்பிவைத்தார். 

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'இந்த புயலில் எதிர்பார்த்ததைவிட அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு வந்தததெல்லாம் சிற்றிடர். இது பேரிடர். குறை சொல்லிக் கொண்டிருப்பதை விட இறங்கி வேலை செய்யவேண்டியது நம் கடமை. மக்களுக்கு உதவுவதுதான் இப்போது முக்கியம். காலநிலை மாற்றம் என்பது உலகம் முழுவதும் நிகழும் ஒன்று. 

மக்களுக்கு என்ன செய்வது என்பதுதான் தற்போதைய பணியே தவிர அரசை குறை கூறுவது அல்ல. 

அரசு இயந்திரம் ஒரு கோடி பேருக்கு சென்று சேர்வது சாத்தியமில்லை, எதிர்காலத்தில் மழை பாதிப்பு இல்லாதபடி வல்லுனர்களுடன் இணைந்து திட்டங்களை ஆய்வு செய்ய வேண்டும். 

எனவே குறை சொல்வதை பிற்பாடு வைத்துக்கொண்டு மக்களுக்குத் தேவையானதை உடனே செய்ய வேண்டும். 

மக்கள் நீதி மய்யம் சார்பில் நாளை மருத்துவ முகாம் தொடங்கப்படும்' என்று பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com