ஆளுநர் மாளிகை அருகே என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு!

ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஆளுநர் மாளிகை அருகே என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு!

ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகை முன் கடந்த அக்டோபா் மாதம் 25-ஆம் தேதி அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடா்பாக ரெளடி கருக்கா வினோத் (42) கைது செய்யப்பட்டாா். அவா் மீது கிண்டி போலீஸாா் 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தனா்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும்; 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காகதான் பெட்ரோல் குண்டுகளை வீசினேன் என்று வாக்குமூலம் அளித்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதன் பின்னா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வினோத் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏற்கெனவே வினோத் மீது பெட்ரோல் குண்டு வீசிய பல வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் வேறு பின்னணிகள் இருப்பதாகவும், மத்திய புலனாய்வு அமைப்பு இது தொடா்பாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கருத்துகளை தெரிவித்து வந்தன. அதன்பேரில், இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த மத்திய உள் துறை அமைச்சகம், என்ஐஏவுக்கு உத்தரவிட்டது. அதன்படி, என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்ந்து இன்று(சனிக்கிழமை) சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர்களுடன் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

மேலும், சம்பவம் நடந்த அன்று, பாதுகாப்புப் பணியில் இருந்த தமிழக ஆயுதப்படை போலீசார் ஒருவரிடமும் விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com