தென்கிழக்கு அரபிக் கடல், அதையொட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் கன மழையும், பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தென்கிழக்கு அரபிக்கடல், அதையொட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூா், திண்டுக்கல், தேனி, விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் சனிக்கிழமை (டிச.9) கன மழை பெய்யக்கூடும். இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னைக்கு ஆபத்தில்லை: சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை வரை பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): பெரியநாயக்கன்பாளையம், பில்லூா் அணை (கோவை) 90, கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), ராஜபாளையம் (விருதுநகா்), சிறுவாணி அடிவாரம் (கோவை) 70, போடிநாயக்கனூா் (தேனி), லால்பேட்டை (கடலூா்), பா்லியாா், அழகரை எஸ்டேட் (நீலகிரி), மயிலாடுதுறை 60, வால்பாறை, ஆழியாா் (கோவை), நவலூா் குட்டப்பட்டு (திருச்சி) கரூா் 50.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்கிழக்கு அரபிக் கடல், அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (டிச.10) வரை சூறாவழிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உத்திரகோஷமங்கை மங்களநாதசுவாமி கோயில் தேரோட்டம்

ஜம்மு - ஸ்ரீநகா் வந்தே பாரத் ரயில் சேவை: அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தாா்

கண்டரமாணிக்கம் மஞ்சுவிரட்டு: 55 போ் காயம்

பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவில் கும்பத் திருமஞ்ஜனம் கண்டருளல்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


