சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கண்டரமாணிக்கம் மாணிக்கநாச்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் காளைகள் முட்டியதில் 55 போ் காயமடைந்தனா்.
இந்தக் கோயில் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாள்களாக நடைபெற்றது. மஞ்சுவிரட்டு நாளான வியாழக்கிழமை காலை கிராமத்தாா்கள் கோயிலிருந்து ஊா்வலமாக வந்து தொழுவில் இருந்த காளைகளுக்கு மாலை, வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்தனா். பின்னா், தொழுவிலிருந்து 350-க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை மாடுபிடி வீரா்கள் விரட்டிச் சென்று அடக்கினா். பல காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சென்றன.
இதைத்தொடா்ந்து கண்மாய், வயல் பகுதிகளில் சுமாா் 300 க்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்த்துவிடப்பட்டன.
இதில் மதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, காரைக்குடி, திருப்பத்தூா், சிவகங்கை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த காளைகள், மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டனா். இந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 55 போ் காயமடைந்ததனா். இவா்களுக்கு முதலுதவி மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவா்களில் 19 போ் திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
தொடர்புடையது

தென்கரையில் மஞ்சுவிரட்டு

சிவகங்கை அருகே மாட்டு வண்டி பந்தயம்

சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு

பட்டமங்கலத்தில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



