புயல் நிவாரணம்: வங்கிக் கணக்கில் தர வலியுறுத்தல்!

இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க புயல் வெள்ள நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை வைத்துள்ளார். 
புயல் நிவாரணம்: வங்கிக் கணக்கில் தர வலியுறுத்தல்!


இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க புயல் வெள்ள நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை வைத்துள்ளார். 

மிக்ஜம் புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மக்கள் அனைவருக்கும் நிவாரணத் தொகையாக ரூ.6,000 வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். 

பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு அதன்பிறகு ரொக்கமாக நிவாரணத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மக்களுக்கு வழங்கும் புயல் வெள்ள நிவாரணத் தொகையை வங்கிக்கணக்கில் வழங்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். 

மேலும், சென்னை புறநகரில் மழை வெள்ளம் வடியாததால் படகுகளில் மாணவர்கள் பள்ளி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றும்

மழை நீரால் நோய் ஆபத்துள்ளதால் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com