

திருவள்ளூர்: புழல் சிறையில் இருந்து பெண் கைதி ஒருவர் தப்பிச் சென்றார். அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெங்களூருவை சேர்ந்த கைதி ஜெயந்தி வியாழக்கிழமை தப்பிச் சென்றுள்ளார்.
கைதிகளுக்கு வழங்கப்படும் வழக்கமான பணிக்கு பின் கணக்கெடுக்கும்போது கைதி தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதையும் படிக்க | அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம்!
இதையடுத்து பெண் கைதி ஜெயந்தியை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஒரு தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் சென்றுள்ளனர்.
மற்றொரு தனிப்படை போலீசார் சிறையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.