வெள்ள நிவாரண டோக்கன் விநியோகம் தொடக்கம்

மிக்ஜம் புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரண உதவித் தொகை வழங்குவதற்கான டோக்கன்கள் விநியோகிக்கும் பணி தொடங்கியிருக்கிறது.
வெள்ள நிவாரண டோக்கன் விநியோகம் தொடக்கம்

மிக்ஜம் புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரண உதவித் தொகை வழங்குவதற்கான டோக்கன்கள் விநியோகிக்கும் பணி தொடங்கியிருக்கிறது.

நிவாரணத் தொகையை ரொக்கமாக வழங்குவதில் எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில், விநியோகிப்பதற்காக நியாவிலைக் கடைகள் மூலம் டோக்கன்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் விநியோகம் செய்யும் பணி இன்று தொடங்கியிருக்கிறது. 

கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர், மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர் ஆகியோர் இணைந்து, உரிய ஏற்பாடுகளை செய்யவும் தமிழக அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

யாருக்கெல்லாம் நிவாரண உதவித் தொகை?

மிக்ஜம் புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வா் அறிவித்த நிவாரண உதவித் தொகை ரூ. 6,000 யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்பது பற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

சென்னை மாவட்டத்தில் அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் டிச. 3, 4 ஆகிய நாள்களில் கனமழை பெய்து, கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.6,000 வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

இந்த நிலையில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் நிவாரண உதவித் தொகை வழங்குவதற்கான அரசாணை செவ்வாய்க்கிழமை (டிச.13) வெளியிடப்பட்டது.

சென்னை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் உள்ள மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப்படும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூா் வட்டங்கள் முழுமையாகவும் மற்றும் திருப்போரூா் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வழங்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூா் வட்டம் முழுமையும் வழங்கப்படும். ஸ்ரீபெரும்புதூா் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கு வழங்கப்படும். திருவள்ளூா் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூா் ஆகிய 6 வட்டங்களுக்கு வழங்கப்படும்.

மத்திய, மாநில அரசு, பொதுத் துறை நிறுவன உயா் அலுவலா்கள், வருமான வரி செலுத்துவோா், சா்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரா்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பு, துணி, பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் இழப்பு ஏற்பட்டிருந்தால், பாதிப்பு விவரங்களை தங்களது வங்கிக் கணக்கு விவரத்துடன் தங்கள் பகுதிக்குரிய நியாயவிலைக் கடைகளில் விண்ணப்பிக்கலாம்.

அந்த விண்ணப்பங்கள் சரிபாா்க்கப்பட்டு அதன் அடிப்படையில் அவா்களுக்கும் உரிய நிவாரணம் வங்கிக் கணக்குக்கு அனுப்பிவைக்கப்படும். இதற்குத் தேவையான அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் நியாயவிலைக் கடைகளிலேயே தேவையான அளவு வைக்கப்படும்.

டோக்கன்களை குடும்ப அட்டைதாரா்களுக்கு முறையாக, முன்னதாக அளிக்கும் பணியும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com