விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: முதல்வர் நிதியுதவி

விருதுநகர் மாவட்டம், பனையடிபட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி  அறிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளா
கோப்புப்படம்
கோப்புப்படம்


விருதுநகர் மாவட்டம், பனையடிபட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல்
மற்றும் நிதியுதவி  அறிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் வெளயிட்டுள்ள இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவிப்பில், விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், பனையடிபட்டி கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை (டிச.15) காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் பனையடிப்பட்டி கிராமம், கண்டியாபுரத்தைச் சேர்ந்த பொம்மு ரெட்டியார் மகன் சண்முகராஜ் (36)  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்ததோடு, அவரது குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com