விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே ஆண்டிக்காடு கிராம அஞ்சலகத்தில், பணியாற்றும் ஊழியர் கோவிந்தராஜ்(64), பட்டுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் கும்பகோணத்தைச் சேர்ந்த வடிவேல்(52), ராஜமடத்தை சேர்ந்த சங்கர்(42) ஆகியோரிடம் போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட கடவுச்சீட்டுகளை வினியோகம் செய்வதாக கிடைத்த தகவலின்படி, கடந்த 12 ஆம் தேதி கோவிந்தராஜ், வடிவேல் மற்றும் சங்கர் ஆகிய மூவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.
அப்போது, மூவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு போலியாக ஆவணங்கள் தயாரித்து, அதை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தும், உரிய போலீஸ் விசாரணை ஏதும் நடத்தாமல், அதற்கு ஒப்புதல் வழங்கியும், பாஸ்போர்ட் அலுவலகத்தில் உள்ள சிலரின் துணையோடு இந்திய அரசின் கடவுச்சீட்டு வழங்கியது தெரியவந்தது.