மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

புரட்டிப்போட்ட மழை, வெள்ளம்: பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ள ஸ்டாலின்

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளார்.

News image
Updated On :18 டிசம்பர் 2023, 10:29 am

DIN


சென்னை: தமிழகத்தில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளார்.

டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களையும், தற்போது நெல்லை உள்பட தென் மாவட்டங்களையும் மழை, வெள்ளம் புரட்டிப்போட்டிருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது, தென் மாவட்ட மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்திய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை புது தில்லியில் சந்திக்க நேரம் கோரியுள்ளார்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரவும், தற்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துக் கூறி ஆலோசிக்கவும், நாளை புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்திக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரம் கோரி கடிதம் எழுதியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.