அதிகனமழை என முன்கூட்டியே உரிய எச்சரிக்கை அளிக்கப்பட்டதா?

தென் மாவட்டங்களில் அதிகனமழை குறித்து முன்கூட்டியே உரிய எச்சரிக்கை அளிக்கப்பட்டதா என்பது குறித்து எஸ். பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
அதிகனமழை என முன்கூட்டியே உரிய எச்சரிக்கை அளிக்கப்பட்டதா?


சென்னை: டிசம்பர் முதல் வாரத்தில் வட தமிழகத்திலும், தற்போது தென் தமிழகத்திலும் அதிகனமழை பெய்திருக்கும் நிலையில், தென் மாவட்டங்களில் அதிகனமழை குறித்து முன்கூட்டியே உரிய எச்சரிக்கை அளிக்கப்பட்டதா என்பது குறித்து எஸ். பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வுமைய தென் மண்டலத் தலைவர் எஸ். பாலச்சந்திரன், இந்திய வானிலை ஆய்வு மையத்தால் நான்கு எச்சரிக்கைகள் கொடுக்கப்படுகிறது. அதில், அதிகபட்சமாக ரெட் அலர்ட் கொடுக்கப்படுகிறது. நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது.

டிசம்பர் 16ஆம் தேதி முதல் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலையில் நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறோம் என்று விளக்கம் அளித்துள்ளார்.

அதிகனமழை பெய்யும் என்று துல்லியமாக கணிக்க முடியுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஒவ்வொரு துறையும் வளர்ந்துகொண்டுதானிருக்கிறது. அறிவியல் வளரும்போது நிச்சயமாக அதிகனமழையை கணிக்க முடியும். எனவே, துல்லியத்தன்மை இருந்தால் இதனை யாரும் மறைக்கப்போவதில்லை. துல்லியத்தன்மை எந்த அளவுக்கு இருக்கிறதோ அதை வெளியிடுகிறோம். மழையைக் கணிக்கவே முடியாத காலக்கட்டங்களிலும் அதிகனமழை பெய்திருக்கிறது. இப்போது கனமழையை கணிக்க முடிகிறது என்றார்.

மேலும் பேசிய அவர், இந்த அளவுக்கு அதிகனமழை பெய்வது குறித்து ஏன் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பதற்கு பதிலளித்துள்ளார்.

அதாவது, அறிவியல் முறையில் பார்த்தால், ஒரு வளிமண்டல சுழற்சியால் இந்த அளவுக்கு மழை எதிர்பார்க்கப்படுவதில்லை. கீழடுக்கு சுழற்சியாக இருந்த போதும் கூட கனமழை முதல் மிகக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.  எனினும், நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் பரவலாக மழையும், அதிக இடங்களில் அதிகனமழையும் பெய்திருக்கிறது.

வருங்காலங்கட்டத்தில், புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால், இதுபோன்ற அதிகனமழைகள் அடிக்கடி ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய வானிலை ஆய்வு மையத்தில் அதிகபட்சமாக ரெட் அலர்ட் மட்டும்தான் கொடுக்கப்படும். ஒரு நாளில் 21 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும் என்றாலே ரெட் அலர்ட் தான் கொடுக்கப்படும். அதற்கு மேல் எச்சரிக்கையில்லை. 

ஒரு வளிமண்டல சுழற்சியிலிருந்து இந்த அளவுக்கு மழை பெய்தில்லை. அப்படியிருந்த போதும் கன முதல் மிகக் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தோம் என்றும் குறிப்பிட்டார்.

மேக வெடிப்பு என்றால் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ. மழை பெய்யும். ஆனால் தென் மாவட்டங்களில் ஒரு நாள் முழுக்க தொடர்ந்து மழைபெய்துகொண்டே இருந்தது. இது அதிகனமழைதான். 21 செ.மீ. மேல் எதுவாக இருந்தாலும் அது அதிகனமழைதான் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com