தனிக் கட்சி தொடக்கமா? ஓபிஎஸ் பதில்

தனிக் கட்சி தொடங்குவது குறித்து நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
படம்: எக்ஸ்
படம்: எக்ஸ்

சென்னை: தனிக் கட்சி தொடங்குவது குறித்து நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடியை பயன்படுத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் தனது ஆதரவு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், தனிக் கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்றும், அதிமுக வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும் என்றும் நிர்வாகிகள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழு என்ற தற்காலிக குழு ஒன்றையும் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com