சென்னை - குருவாயூர் விரைவு ரயில் சேவையில் மாற்றம்

நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, சென்னை - குருவாயூர் விரைவு ரயில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை - குருவாயூர் விரைவு ரயில் சேவையில் மாற்றம்


சென்னை: நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, சென்னை - குருவாயூர் விரைவு ரயில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரிலிருந்து குரூவாயூர் நோக்கிச் சென்ற விரைவு ரயில் திருச்சியில் நிறுத்தப்பட்டுள்ளது.

அதுபோல, குருவாயூரிலிருந்து எழும்பூர் வரை செல்லக் கூடிய விரைவு ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

அதுபோல, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் வழியாக இயக்கப்படும் 23 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இரு மாவட்டங்களிலும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக சில ரயில்கள் திண்டுக்கல்லில் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நெல்லையிலிருந்து புறப்படும் ரயில்கள் ரத்துசெய்யப்பட்டிருந்தன.

ரயில்கள் ரத்து

செவ்வாய்க்கிழமை (டிச.19) வாஞ்சி மணியாச்சி-தூத்துக்குடி முன்பதிவில்லா ரயில்கள் (இருமாா்க்கத்திலும்), கோவை-நாகா்கோவில் (16322) ஆகிய ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டை, நாகா்கோவில், திருச்செந்தூா், தூத்துக்குடி, செல்லும் அனைத்து முன்பதிவில்லா ரயில்களும், திருச்செந்தூரிலிருந்து - வாஞ்சி மணியாச்சி முன்பதிவில்லா ரயிலும் டிச.19-இல் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

திருச்சி - திருவனந்தபுரம் (இருமாா்க்கம்), பாலக்காடு - திருநேல்வேலி (எண். 16792), திருச்செந்தூா் - எழும்பூா் (20606) ஆகிய விரைவு ரயில்கள் டிச.19-இல் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com