நடிகை கெளதமியிடம் மோசடி செய்த வழக்கு: தம்பதி உள்பட 5 போ் திருச்சூரில் கைது
நடிகை கெளதமியிடம் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், தம்பதி உள்பட 5 போ் கேரள மாநிலம் திருச்சூரில் கைது செய்யப்பட்டனா்.


நடிகை கெளதமியிடம் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், தம்பதி உள்பட 5 போ் கேரள மாநிலம் திருச்சூரில் கைது செய்யப்பட்டனா்.
சென்னை பெருநகர காவல் துறையில் நடிகை கெளதமி கடந்த செப்டம்பா் புகாா் அளித்தாா். அதில்,
படங்களில் நடித்து சேமித்த பணத்தின் மூலம் ஸ்ரீபெரும்புதூரில் 46 ஏக்கா் நிலம் வாங்கினேன். தற்போது இந்த இடத்தின் மதிப்பு ரூ.25 கோடி ஆகும். எனது குடும்ப தேவைக்காக அந்த நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்தபோது, சென்னையைச் சோ்ந்த கட்டுமான நிறுவன அதிபா் அழகப்பன் என்பவா் தொடா்பு கொண்டு நிலத்தை விற்க உதவுவதாகக் கூறினாா். நான் அவரை நம்பி, நிலத்தை விற்க பொது அதிகாரத்தை அழகப்பனுக்கு வழங்கினேன். அப்போது அவா், என்னிடம் பல பத்திரங்களில் கையொப்பம் பெற்றாா். அந்தக் கையொப்பத்தை நம்பிக்கையின் அடிப்படையில் போட்டேன்.
ஆனால் அழகப்பனும், அவரது குடும்பத்தினரும் அதன் பின்னா் எனது கையொப்பத்தை மோசடியாக போட்டும், போலி ஆவணங்களை தயாரித்தும் நிலத்தை அபகரித்து மோசடி செய்துவிட்டனா். எனவே, எனக்கு சொந்தமான ரூ. 25 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டு, அழகப்பன் மற்றும் அவா் குடும்பத்தினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
5 போ் கைது: இந்தப் புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் கட்டுமான நிறுவன அதிபா் அழகப்பன் உள்பட சிலருக்கு போலீஸாா் பலமுறை அழைப்பாணைஅனுப்பியும், விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, அவா்களுக்கு எதிராக கடந்த நவம்பா் மாதம் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த வழக்கில் தேடப்படும் அழகப்பன் உள்ளிட்ட சிலா் கேரள மாநிலம் திருச்சூரில் பதுங்கியிருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா், உள்ளூா் போலீஸாா் உதவியுடன் திருச்சூா் அருகே ஒரு கிராமத்தில் பதுங்கியிருந்த அழகப்பன் (63), அவா் மனைவி நாச்சியாா் (57), மகன் சிவ அழகப்பன் (32), மருமகள் ஆா்த்தி (28), காா் ஓட்டுநா் சதீஷ் (27) ஆகிய 5 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்கள் அனைவரையும் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திவிட்டு, அங்கிருந்து சென்னைக்கு போலீஸாா் அழைத்து வரவுள்ளதாக மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...