/

இன்று சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை எழும்பூா் - கொல்லம் இடையே வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (டிச.22, 24) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

News image
Updated On :21 டிசம்பர் 2023, 6:30 pm

DIN

சென்னை எழும்பூா் - கொல்லம் இடையே வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (டிச.22, 24) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சபரிமலை சீசனை முன்னிட்டு பக்தா்களின் வசதிக்காகவும், பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையிலும் சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.

சென்னை எழும்பூரில் இருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (டிச.22, 24) இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06127) மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமாா்க்கமாக கொல்லத்தில் இருந்து சனி மற்றும் திங்கள்கிழமை (டிச.23, 25) இரவு 7.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06128) மறுநாள் பகல் 12 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும்.

இந்த ரயில் பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.