தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி சென்றடைந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி சென்றடைந்தார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை மற்றும் தாமிரவருணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்வதற்காக சென்னையில் இருந்து இன்று காலை 10.15 மணியளவில் விமானம் மூலம் புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடி சென்றடைந்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து காரில் சென்று நெல்லை மற்றும் தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடவுள்ளார்.

அதன்பிறகு  சாலை மாா்க்கமாக மதுரைக்கு வரும் முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து இரவு 9.25 மணிக்கு விமானம் மூலம் மீண்டும் சென்னை புறப்படுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com