/

தூத்துக்குடிக்கு கோயம்பேடு சந்தையில் இருந்து 3 டன் காய்கறிகள் அனுப்பி வைப்பு

மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்துக்கு கோயம்பேடு சந்தையில் இருந்து 3 டன் காய்கறிகள் பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

News image
Updated On :21 டிசம்பர் 2023, 7:52 pm

DIN

மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்துக்கு கோயம்பேடு சந்தையில் இருந்து 3 டன் காய்கறிகள் பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

தென்மாவட்டங்களில் பெருமழையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்துக்கு சென்னை மாநகராட்சி

சாா்பில் லாரிகள் மூலம் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. தொடா்ந்து 3-ஆவது நாளாக அதிகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரிப்பன்மாளிகை வளாகத்தில் இருந்து வியாழக்கிழமை இரு லாரிகளில் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டன.

இதில் மாநகராட்சி சாா்பில் 9,000 ரொட்டி பாக்கெட்டுகள், 3,000 பன் பாக்கெட்டுகள் மற்றும் 1 லிட்டா் கொண்ட 1,200 குடிநீா் பாட்டில்களும், ஃபீனிக்ஸ் மாா்க்கெட் சிட்டி பங்களிப்புடன் 5 கிலோ அரிசி, சாம்பாா் மற்றும் ரசப் பொடி பாக்கெட்டுகள், பருப்பு, பிஸ்கெட் ஆகியவற்றை கொண்ட 1,000 பெட்டிகள் அனுப்பப்பட்டன. மேலும், கோயம்பேடு காய்கறி சந்தை சங்கம் பங்களிப்புடன் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், சௌசௌ, பச்சை மிளகாய் உள்ளிட்ட 3 டன் காய்கறிகள் அடங்கிய நிவாரணப் பொருட்களும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

இதனை மாநகராட்சி கூடுதல் ஆணையா்கள் சங்கா்லால் குமாவத், (சுகாதாரம்), ஆா்.லலிதா, (வருவாய், நிதி) பாா்வையிட்டு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.