இன்று சென்னையில் புரோ கபடி லீக் ஆட்டங்கள்: தமிழ் தலைவாஸ் நம்பிக்கை
புரோ கபடி லீக் சீஸன் 10 தொடா் ஆட்டங்கள் சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள நிலையில், தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக செயல்படுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.


புரோ கபடி லீக் சீஸன் 10 தொடா் ஆட்டங்கள் சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள நிலையில், தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக செயல்படுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஐபிஎல்லுக்கு அடுத்து அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது பிகேஎல் எனப்படும் புரோ கபடி லீக் தொடா். புணேயில் ஆட்டங்கள் முடிந்த நிலையில், 4 ஆண்டுகள் கழித்து சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் 27-ஆம் தேதி வரை ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
உள்ளூா் அணியான தமிழ் தலைவாஸ் இதற்காக தீவிரமாக தயாராகி வருகிறது.
இதுதொடா்பாக பயிற்சியாளா் அசன் குமாா், கேப்டன் சாகா் ரதி ஆகியோா் வியாழக்கிழமை கூறியது: சொந்த மைதானமான சென்னையில் ஆட்டங்கள் நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. ஏற்கெனவே 4 ஆட்டங்களில் தலா 2 வெற்றி, தோல்வியைப் பெற்றோம். 11-ஆவது இடத்தில் உள்ளோம். ஒரு ஆட்டத்தில் வென்றாலும் 6-ஆவது இடத்துக்கு வந்து விடுவோம்.
அணியில் வீரா்கள் கட்டுக்கோப்பாக ஒருங்கிணைந்து ஆடுகின்றனா். தமிழக வீரா்கள் செல்வமணி, அபிஷேக், மாசானமுத்து ஆகியோருக்கும் வாய்ப்பு தரப்படும்.
தற்போது தான் லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருவதால் எந்த அணியையும் கணிக்க முடியாது. சென்னை பிரிவு ஆட்டங்களில் வெற்றி பெற தீவிரமாக முயல்வோம் எனத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...