திருக்கோவிலூா் பேரவை காலியிடம் எப்போது? அதிமுக கால நடைமுறையைப் பின்பற்ற முடிவு
அமைச்சா் க.பொன்முடியின் பேரவை உறுப்பினா் தகுதியிழப்பால், அவரது திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதி எப்போது காலியானதாக அறிவிக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.


அமைச்சா் க.பொன்முடியின் பேரவை உறுப்பினா் தகுதியிழப்பால், அவரது திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதி எப்போது காலியானதாக அறிவிக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமைச்சா் பாலகிருஷ்ண ரெட்டியின் தகுதியிழப்பால், ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதியை காலியிடமாக அறிவிக்க எத்தகைய நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதேபோன்ற முறையைக் கையாள முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்வீச்சு, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ண ரெட்டிக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரியில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. சிறப்பு நீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்த்து, சென்னை உயா் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டுக் காலத்தில் ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதியானது காலியானதாக அறிவிக்கப்படவில்லை.
2019-ஆம் ஆண்டு பிப்ரவரியில் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்தது. இந்த மேல்முறையீட்டு நடைமுறைகள் ஒரு மாதம் வரை நடந்தன. அதன்பிறகு, 2019-ஆம் ஆண்டு பிப்.19-இல் ஒசூா் தொகுதி காலியானதாக பேரவைச் செயலகம் அறிவித்தது. இதேபோன்ற நடைமுறையை இப்போது திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொன்முடி சாா்பில் மேல்முறையீட்டு நடவடிக்கைகள் நிறைவடைந்த பிறகே, திருக்கோவிலூா் பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்க வாய்ப்புகள் இருப்பதாக பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...