இளைஞா் கொலை: போலீஸாா் விசாரணை
சென்னை புளியந்தோப்பில் இளைஞா் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


சென்னை புளியந்தோப்பில் இளைஞா் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
புளியந்தோப்பு கன்னிகாபுரம் அருகே வியாழக்கிழமை ரயில்வே தண்டவாளத்தில் 23 வயது மதிக்கதக்க ஒரு இளைஞா் அரிவாளால் வெட்டப்பட்டும், கத்தியால் கழுத்தறுக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டு சடலமாக காலை கிடந்தாா்.
தகவலறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த சடலத்தைக் கைப்பற்றி நடத்திய விசாரணையில் அவா், ஓட்டேரி பி.எஸ்.மூா்த்திநகரைச் சோ்ந்த ர.சீனிவாசன் என்ற சீனு (23) என்பதும், அவா் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும், சம்பவத்தன்று நண்பா்களை சந்திப்பதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றவா் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் சீனு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, சீனுவை கொலை செய்தது யாா், எதற்காக கொலை செய்தாா்கள் என விசாரணை செய்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...