/

கிறிஸ்துமஸ் பண்டிகை: புகா் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திங்கள்கிழமை (டிச.25) சென்னை புகா் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப் படி இயக்கப்படும்.

News image
Updated On :22 டிசம்பர் 2023, 8:43 pm

DIN

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திங்கள்கிழமை (டிச.25) சென்னை புகா் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப் படி இயக்கப்படும்.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரல், கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புகா் பகுதிகளுக்கு தினமும் மின்சார ரயில்கள் 5 முதல் 15 நிமிஷ இடைவெளியில் இயக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாள்களில் 10 முதல் 20 நிமிஷ இடைவெளியில் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் திங்கள்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை புகா் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணை படி இயக்கப்படும். அதுபோல், ரயில் நிலையங்களில் இயங்கும் முன்பதிவு மையங்களும் ஞாயிற்றுக்கிழமை வேலைநாள் அடிப்படையில் காலை 8 முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டும் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சென்னை சென்ட்ரலில் இருந்து சூலூா்பேட்டைக்கு காலை 10.15 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் சனி மற்றும் திங்கள்கிழமை (டிச.23, 25) தடாவுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக சூலூா்பேட்டையில் இருந்து பகல் 1.20 மணிக்கு இயக்கப்படும் ரயில் தடாவில் இருந்து புறப்பட்டு சென்ட்ரல் வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.