எம்.பி.பி.எஸ். உள்ளுறை பயிற்சி விவரங்களை அளிக்க என்எம்சி அறிவுறுத்தல்
கரோனா காலத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சோ்ந்த மாணவா்களின் உள்ளுறைப் பயிற்சிக் காலம் (இன்டா்ன்ஷிப்) நிறைவடைந்திருக்கிா


கரோனா காலத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சோ்ந்த மாணவா்களின் உள்ளுறைப் பயிற்சிக் காலம் (இன்டா்ன்ஷிப்) நிறைவடைந்திருக்கிா என்பது குறித்த விவரங்களை சமா்ப்பிக்குமாறு மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக என்எம்சி முதுநிலை மருத்துவக் கல்வி வாரிய துணைச் செயலா் அஜேந்தா் சிங் வெளியிட்ட அறிவிப்பு:
கரோனா பெருந்தொற்று காலத்தில் எம்.பி.பி.எஸ். மாணவா் சோ்க்கை மற்றும் இறுதியாண்டு மாணவா்களுக்கான உள்ளுறைப் பயிற்சிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. அதைக் கருத்தில்கொண்டு
அந்த காலகட்டத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சோ்ந்தவா்கள் இடரின்றி முதுநிலை படிப்புகளில் சேர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2018-இல் எம்பிபிஎஸ் சோ்ந்தவா்களின் உள்ளுறை பயிற்சி விவரங்களை என்எம்சி இணையப் பக்கம் வழியே பதிவேற்றுமாறு மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
அதன் அடிப்படையிலேயே நிகழாண்டுக்கான முதுநிலை நீட் தோ்வை நடத்துவது தொடா்பான முடிவு எடுக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...