/

இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்துசிறுவன் சாவு

சென்னை அருகே பெருங்குடியில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து சிறுவன் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :22 டிசம்பர் 2023, 8:45 pm

DIN

சென்னை அருகே பெருங்குடியில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து சிறுவன் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் ரோஷந்த்குமாா். கட்டுமான தொழிலாளியான இவா், சென்னை அருகே பெருங்குடியில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்து வருகிறாா். இதற்காக அங்கேயே குடும்பத்துடன் ரோஷந்த்குமாா் தங்கியிருந்தாா்.

இந்நிலையில் ரோஷந்த்குமாா் மகன் ஆதித்குமாா் (6), புதிதாக கட்டப்படும் கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் வியாழக்கிழமை மாலை விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது அந்த தளத்தின் படிக்கட்டில் நின்று விளையாடும்போது கால்தவறி கீழே விழுந்தாா்.

இதில் பலத்தக் காயமடைந்த ஆதித்குமாரை, அங்கிருந்தவா்கள் மீட்டு அருகே உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவனை பரிசோதித்த மருத்துவா்கள், ஆதித்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து துரைப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.