வைகுந்த ஏகாதசி விழா: அருள்மிகு கோட்டை அழகிரிநாதர் திருகோயிலில் பரமபத வாசல் திறப்பு

சேலம் அருள்மிகு கோட்டை அழகிரி நாதர் திருகோயிலில் சனிக்கிழமை அதிகாலை  பரமபதவாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏகாதசியையொட்டி சனிக்கிழமை அதிகாலை சேலம் கோட்டை அழகிரிநாதர் பெருமாள் கோயிலில் அதிகாலை திறக்கப்பட்ட சொர்க்க வாசல்
ஏகாதசியையொட்டி சனிக்கிழமை அதிகாலை சேலம் கோட்டை அழகிரிநாதர் பெருமாள் கோயிலில் அதிகாலை திறக்கப்பட்ட சொர்க்க வாசல்
Published on
Updated on
2 min read


சேலம்: சேலம் அருள்மிகு கோட்டை அழகிரி நாதர் திருகோயிலில் சனிக்கிழமை அதிகாலை  பரமபதவாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்துகளின் முக்கிய விரதவழிபாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது வைகுந்த ஏகாதசி, இந்த வைகுந்த ஏகாதசி வைபவம் சனிக்கிழமை அணைத்து பெருமாள் திருக்கோயில்களிலும் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.குறிப்பாக தமிழகத்தில் அனைத்து பெருமாள் திருகோவில்களிலும் வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது

அதேபோன்று,சேலத்தில் உள்ள அணைத்து பெருமாள் திருக்கோவில்களிலும் சனிக்கிழமை வைகுந்த ஏகாதசி வைபவம் சிறப்பாக நடைபெற்றது.குறிப்பாக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மிகவும் பழமையானதும் வரலாற்று சிறப்புமிக்க கோயிலுமான அருள்மிகு கோட்டை அழகிரி நாதர் திருக்கோவில். வைகுந்த ஏகாதசி வைபவம் மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது. 

ரத்னகிரீடத்தில் ராஜா அலங்காரத்தில் பெருமாளும் தாயாரும் கோயிலின் உள்பிரகாரத்தில் வளம் வந்தனர்.

அதிகாலை நான்கு மணியளவில் உற்சவ மூர்த்தியான பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வண்ண மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து தங்கக் கவசம் ரத்னகிரீடத்தில் ராஜா அலங்காரத்தில் பெருமாளும் தாயாரும் கோவியின் உள்பிரகாரத்தில் வளம் வந்து பின்னர் வடக்கு புரம் அமைந்துள்ள ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் பரமபதவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பல்லகில் பவனி வந்தார். இதனை தொடர்ந்து பெருமாளும் தாயாரும் திருக்கோயிலை சுற்றி வலம் வந்தபின் பெருமாளுக்கும் தாயருக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்வை காண அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின்னர் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

இது குறித்து சுதர்சனம் பட்டாசாரியார் கூறியதாவது:  விரதத்தில் மிக முக்கிய விரதம் வைகுந்த ஏகாதசி விரதம். இந்த நாளில் விரதம் இருந்தால் சொர்கத்திற்கு செல்வார்கள் என்பது ஐதீகம் எனவும், இந்த நாளில் பெருமாளை தரிசிப்பது குடும்பத்திற்கு மிகவும் சிறந்தது எனவும் தெரிவித்தார். 

மேலும் இந்த  வைகுந்த ஏகாதசி திருநாளில் ஆண்டவனை தரிசனம் செய்தால் எல்லாவித நன்மைகளும் பெற்று குடும்பம் சந்தோஷமாக இருக்கும் என்றும் சகல ஜஸ்வர்யங்களும் கிடைக்கும் எனவும்  தெரிவித்தார். 

இதே போல சேலத்தில் உள்ள அணைத்து பெருமாள் திருக்கோயில்களிலும் பரமபதவாசல் திறக்கும் வைபவம் மிக விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

ஆயிரக்கணக்கான  பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்து விட்டு பரமபதவாசல் வழியாக வந்து மகிழ்ச்சி அடைந்தனர்.

கோயிலின் உள்பிரகாரத்தில் வளம் வரும் பெருமாளையும் தாயாரையும் தரிசிக்கும் பக்தர்கள்.

இந்த ஆண்டு விஐபி தரிசனம், சிறப்பு தரிசனம் என எதுவும் இல்லாமல் ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் மட்டுமே தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.

மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி தலைமையில் திருக்கோயில் முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். திருக்கோவில் முழுவதும் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வைகுந்த ஏகாதசியையொட்டி  சனிக்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக வெளியே வரும் சேலம் கோட்டை அழகிரிநாதர் பெருமாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com