போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள்: தலைமைச் செயலா் பேட்டி

அதி கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் போர்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக
போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள்: தலைமைச் செயலா் பேட்டி


தூத்துக்குடி: அதி கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் போர்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வரும் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார். 

அதி கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிப்புகளை ஆய்வு செய்த தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, வெள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தாா். பின்னா் பணிகளை துரிதமாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னா் நெல்லை சிவந்திப்பட்டியில் உள்ள நெடுஞ்சான் குளம் உடைப்பையும் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
அதிகன மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் போரக்கால அடிப்படையில் சீரமைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் பாதிப்புக்குள்ளாகின. தற்போது தூத்துக்குடியில் மீட்புப் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. ஆனால் தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் ராட்சத மோட்டாா் பம்புகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதிகன மழை வெள்ளத்தால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இதுவரை 328 குளங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளன. இவற்றை சரிசெய்யும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. 

மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து சரி செய்யப்பட்டுள்ளது. 

வீடு, கால்நடை சேதங்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ரேஷன் காா்டு அடிப்படையில் நிவாரணத்தொகை வழங்கப்படும். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கூட்டு குடிநீர் வினியோகம் செய்யும் பணிகள் முழுவீச்சு நடைபெற்று வருகிறது. 101 தாமிரவருணி கூட்டு குடிநீர் திட்டத்தில் 70 திட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அவற்றில் தற்போது 34 திட்டங்கள் சரி செய்யப்பட்டு குடிநீர் வினியோகம் தொடங்கப்பட்டுள்ளது. 

நெல்லை மாவட்டத்தில் ஒரு சில இடங்களைத் தவிர மற்ற அனைத்து பகுதிகளுக்கும் மின்வினியோகம் வழங்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள் தொடர்பான கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது எவ்வளவு பாதிப்பு என்பது தொடர்பான கணக்கெடுக்கும் பணி நிறைவு பெற்ற பின் வங்கிகள் மூலம் கடன் வழங்கி பாதிப்புகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com