ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விரைவில் ஓபிஎஸ் சிறைக்கு செல்வார்: எடப்பாடி பழனிசாமி 

ஓபிஎஸ் விரைவில் சிறைக்கு செல்வார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :27 டிசம்பர் 2023, 9:44 am

DIN

ஓபிஎஸ் விரைவில் சிறைக்கு செல்வார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்தித்தார். அப்போது தெரிவித்ததாவது:

தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட இருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 

தாழ்வான பகுதி மக்களை முன்கூட்டியே முகாம்களில் சேர்த்திருக்க வேண்டும். தூத்துக்குடியிலும் பாலங்கள் இடிந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காயல்பட்டினத்திலும் உப்பலங்கள் எல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அதிகாரிகள் மக்களை சென்று பார்க்கவே இல்லை. எங்கள் ஆட்சியின் போது கஜா புயல் அடித்தது.  ஆனால், இப்போது பெரிய காற்று இல்லை. வர்தா புயலின் போதும் கடுமையான பாதிப்பு. 6 லட்சம் மரங்கள் விழுந்தன. 2 லட்சம் மரங்களை குப்பைகளாக அகற்றினோம் .

அப்போது, போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு உரிய அத்தியாவசிய பொருள்கள் கொடுத்தோம். மத்திய, மாநில அரசுகள் இரண்டுக்கும் பொறுப்பு உள்ளது.

பாஜக உடன் கூட்டணி இல்லை என்றவுடன் திமுகவினர் புலம்புகிறார்கள்.ஓபிஎஸ் விரைவில் சிறைக்கு செல்ல உள்ளார். 

ஒரு வழக்கில் அல்ல. பல வழக்குகளில் சிறைக்கு செல்ல உள்ளார் என்று  எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.