மறைந்தார் விஜயகாந்த்: பொது இடத்தில் நல்லடக்கம் செய்ய பிரேமலதா கோரிக்கை
விஜயகாந்த் உடல் பொது இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.


சென்னை: தேமுதிக தலைவரும், தமிழ் திரைப்பட நடிகருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது உடல் பொது இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
மருத்துவமனையில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள இல்லத்துக்கு மறைந்த விஜயகாந்த் உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
இதையும் படிக்க.. 2023 - மின் வாகனங்களின் ஆண்டு? பெரும் பிரச்சினைகள்!
அப்போது, தமிழக முதல்வரிடம், விஜயகாந்த் மனைவியும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மறைந்த விஜயகாந்த் உடல் பொது இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
விஜயகாந்த்திற்கு கரோனா தொற்று உள்ளதாகவும் சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமை கழகம் இன்று காலை அறிவித்திருந்தது.
இந்த செய்தி வெளியான சற்று நேரத்தில் விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டது. விஜயகாந்த் உடல் இன்று காலை மருத்துவமனையிலிருந்து அவரது சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்துக்குக் கொண்டு வரப்பட்டது. பிறகு, தேமுதிக அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...