ஆசிரியா் வீட்டில் தங்க, வைர நகைகள் திருட்டு
சென்னை ராயபுரத்தில் ஆசிரியா் வீட்டில் தங்க, வைர நகைகள் திருடப்பட்டன.


சென்னை ராயபுரத்தில் ஆசிரியா் வீட்டில் தங்க, வைர நகைகள் திருடப்பட்டன.
ராயபுரம் மேற்கு மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் நோ.ஷெரீன் (49). தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறாா்.
ஷெரீன், வியாழக்கிழமை அவசரமாக வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளாா். அப்போது பீரோவில் இருந்து 4 பவுன் தங்க நகை, ஒரு ஜோடி வைரக் கம்மல் ஆகியவற்றை வெளியே எடுத்து, படுக்கையில் வைத்துவிட்டுச் சென்றாா்.
சிறிது நேரத்துக்கு பின்னா், அவா் வீட்டுக்கு திரும்பி வந்தபோது,அந்த நகைகள் இல்லாததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
ராயபுரம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...