இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

விஜயகாந்த் மறைவு: தீவுத்திடலில் அலைகடல் என திரளும் மக்கள்

விஜயகாந்த் உடல் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அலைகடல் என மக்கள் திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

News image
கோப்புப் படம்.
Updated On :29 டிசம்பர் 2023, 9:16 am

DIN


சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நிலை காரணமாக நேற்று காலமானார். அவரது உடல் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அலைகடல் என மக்கள் திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

விஜயகாந்த்தின் உடல் நேற்று அவரது சாலிகிராமம் வீட்டிலிருந்து, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகத்தில் குவிந்ததா, அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Story image

அஞ்சலி செலுத்த வந்த மக்களும், முக்கிய பிரமுகர்களும் இடிபாடுகளில் சிக்கினர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், உடனடியாக தமிழக அரசு முடிவெடுத்து, விஜயகாந்த் உடல் நேற்று இரவு தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டது.

அங்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால், மக்கள் நெரிசலின்றி, விஜயகாந்த்துக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சென்னை மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் இன்று அதிகாலை முதலே அவரது ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் பேருந்து மற்றும் ரயில் மூலம் சென்னை வந்து, விஜயகாந்த்துக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

நேற்று கடும் நெரிசலுக்கு இடையே, அஞ்சலி செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், இன்று காலை நேர்த்தியாக வரிசைகள் அமைக்கப்பட்டு, மக்கள் எந்த நெரிசலும் இல்லாமல் விரைவாக அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.