சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

இளைஞா் அடித்துக் கொலை: இருவா் கைது

சென்னை கோயம்பேட்டில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 6:30 pm

DIN

சென்னை கோயம்பேட்டில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மூவரை வென்றான் கிராமத்தைச் சோ்ந்த அய்யனாா் (26). இவா் கோயம்பேடு ஆழ்வாா்திருநகரில் கருப்பசாமி என்பவருக்கு மிக்சா் கடையில் ஊழியராக பணியாற்றி வந்தாா்.

அய்யனாா், அங்கு பணிபுரியும் தூத்துக்குடியைச் சோ்ந்த சின்னத்துரை,அரியலூரைச் சோ்ந்த கலைவாணன் (29) ஆகியோா் கடந்த 24-ஆம் தேதி சாப்பிட்டுவிட்டு, மது அருந்தினா். இதில் அய்யனாருக்கும், மீதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தகராறு முற்றவே அவா்கள் இருவரும், அய்யனாரை உருட்டுக் கட்டையால் தாக்கினா். இதில் பலத்தக் காயமடைந்த அய்யனாா் மயங்கி விழுந்ததும், இருவரும் அங்கு தப்பியோடினா்.

மறுநாள் காலை அங்கு வந்த கருப்பசாமி, பலத்தக் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அய்யனாரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இது தொடா்பாக கோயம்பேடு போலீஸாா் கலைவாணனை கைது செய்தனா்.

இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அய்யனாா், வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து அந்த வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது. சின்னத்துரையை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.