கோயம்புத்தூர் - பெங்களூர் வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமர் தொடக்கி வைத்தார்!

கோயம்புத்தூர் - பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
கோயம்புத்தூர் - பெங்களூர் வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமர் தொடக்கி வைத்தார்!

கோயம்புத்தூர் - பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி ஸ்ரீனிவாசன், சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ் சின்ஹா மற்றும் ரயில்வே துறை உயர் அதிகாரிகள், ரயில்வே பயணிகள் சங்கத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த ரயிலில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதி, சொகுசு இருக்கைகள், சுத்தமான கழிப்பறைகள், தானியங்கி கதவுகள் என பல்வேறு நவீன வசதிகளும் உள்ளது.

எட்டு பெட்டிகள் கொண்ட இந்த வந்தே பாரத் ரயில், வரும் 1 ஆம் தேதி முதல் காலை 5 மணிக்கு கோயம்புத்தூரில் இருந்து புறப்பட்டு, 11:30 மணிக்கு பெங்களூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தை அடைகிறது.

மறு வழித்தடத்தில் பிற்பகல் 1:40 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு, இரவு 8 மணி அளவில் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தை வந்தடைகிறது. இந்த ரயில் வியாழக்கிழமை தவிர மற்ற அனைத்து நாள்களிலும் இயக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com