தமிழகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், உலகம் முழுவதும் கரோனா தாக்கம் மீண்டும் வேகமெடுப்பதையும், நம் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்திருப்பதை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 743 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 3 பேர் கேரளம், 2 பேர் கர்நாடகம், தமிழகத்தில் ஒருவர் அடங்குவர். 

இது வெறும் செய்தி அல்ல, தமிழ்நாடு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டியதற்கான 'எச்சரிக்கை மணி'!!!

இரு மாநில எல்லைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கி இருப்பதால் விமான நிலையங்கள், இரயில் நிலையங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். 

அதேபோல், உருமாறிய ஜெஎன்1 தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதனால் பாதிக்கப்படுபவர்களையும், இணை நோய் உள்ளவர்களையும் தொடர்ந்து கண்காணித்திட மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதை அரசு உறுதி செய்திட வேண்டும்.

மிகமுக்கியமாக, "பொதுமக்களுக்கு முறையான, தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து", மக்களை எவ்வித அச்சமும் இல்லாமல் வைத்திருக்க வேண்டியது அரசின் தலையாய கடமை, பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com