'எல்லார்க்கும் எல்லாம்' என்ற லட்சியம் நிறைவேறும்: முதல்வர் ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து

ஆங்கிலப் புத்தாண்டை யொட்டி பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
'எல்லார்க்கும் எல்லாம்' என்ற லட்சியம் நிறைவேறும்: முதல்வர் ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து
Published on
Updated on
1 min read

ஆங்கிலப் புத்தாண்டை யொட்டி பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், புதிய சிந்தனை, புதிய இலக்குகளுக்கான வாசலைத் திறந்து வைத்து நம்பிக்கையின் ஔிக்கதிர்களுடன் பிறக்கிறது இனிய புத்தாண்டு!

பெரியார், அண்ணா, கலைஞர் வழியில், சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதிக்கான பயணத்தில் எத்தனை தடைகள் எதிர்ப்பட்டாலும் அவற்றைத் தகர்த்தெறிந்து முன்னேறும் நமது திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம், வரும் புத்தாண்டில் புதிய சாதனை உச்சங்களைத் தொடும். 

அதற்கான நம்பிக்கையும் உறுதியும் புத்தாண்டில் நிறைந்துள்ளது. “எல்லார்க்கும் எல்லாம்” என்ற நமது இலட்சியம் நிறைவேறும் நிறைவான ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையட்டும்! அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

2023-ம் ஆண்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) விடைபெறுகிறது. நாளை நள்ளிரவு 12 மணிக்கு பிறக்கப்போகும் 2024-ம் ஆண்டை வரவேற்க உலகமே தயாராகி வருகிறது. நாடு முழுவதும் நாளை நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்ட உள்ளன. 

தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com