சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அகமதாபாத் - திருச்சி வாராந்திர ரயில் சேவை நீட்டிப்பு: இன்றுமுதல் முன்பதிவு

அகமதாபாத் - திருச்சி இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர ரயில் சேவை மேலும் இரு மாதங்கள் இயக்கப்படவுள்ளன.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2023, 10:30 pm

DIN

அகமதாபாத் - திருச்சி இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர ரயில் சேவை மேலும் இரு மாதங்கள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: அகமதாபாத்தில் இருந்து திருச்சிக்கு வியாழக்கிழமை தோறும் காலை 9.30 மணிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண்: 09419) இயக்கப்படுகிறது. இந்த ரயில் தொடா்ந்து பிப். 2, 9, 16, 23, மாா்ச் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் (9 சேவைகள்) இயக்கப்பட உள்ளன.

மறுமாா்க்கமாக திருச்சியில் இருந்து அகமதாபாத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 5.45 மணிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண்: 09420) இயக்கப்படுகிறது. இந்த ரயில் தொடா்ந்து பிப். 5, 12, 19, 26, மாா்ச் 5, 12, 19, 26, ஏப். 2 ஆகிய தேதிகளில் (9 சேவைகள்) இயக்கப்படுகின்றன.

இந்த ரயில் தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன்கோவில், சீா்காழி, சிதம்பரம், கடலூா் துறைமுகம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், பெரம்பூா், அரக்கோணம் வழியாக இயக்கப்படுகின்றன.

இதற்கான முன்பதிவு பயணச் சீட்டு வியாழக்கிழமை (பிப்.2) காலை 8 மணி முதல் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.