ஈரோடு: பதாகையில் பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள் படம் இல்லாமல் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் தேர்தல் பணிமனைய திறந்து அதிமுக அதிரடி காட்டியுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் என யாருக்கு ஆதரவு என தெரிவிக்காமல் பாஜக காலம் தாழ்த்தி வருகிறது. இந்நிலையில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் தேர்தல் பணிமனையை அதிமுக திறந்துள்ளது.
இதையும் படிக்க: எடப்பாடியின் வேட்பாளர் அறிவிப்பு: என்ன செய்யப் போகிறது பா.ஜ.க.?
காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவால் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவப்பிராசாத், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதையும் படிக்க: அதிமுக வேட்பாளர் அறிவிப்பு: பாஜக முடிவு என்ன? அண்ணாமலை பேட்டி!
நீண்ட எதிர்பார்ப்புக்கு இடையே அதிமுக வேட்பாளரை புதன்கிழமை அறிவித்தது. தேர்தல் பணிமனை திறக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே வேட்பாளர் அறிவிப்பு வெளியானது. அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
தேர்தல் பணிமனையில் வைக்கப்பட்டுள்ள பதாகையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என உள்ளது. பாஜக முடிவை அறிவிக்காத நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் தேர்தல் பணிமனையை அதிமுக திறந்துள்ளது.
இதையும் படிக்க: ஈரோடு கிழக்கு: அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு!
இந்த பதாகையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளது. பாஜக முடிவை பொறுத்து பதாகையை மாற்றுவது குறித்து முடிவு செய்யப்படும் என அதிமுக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சனந்த் நடிக்கும் ஹார்ட்டின் பட டிரைலர் வெளியீடு!

விஜய் அன்பளிப்பு! ரிக்ஷா தொழிலாளர்களுக்கு இலவச மழை கோட்டுகள்!

அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்குகிறாரா?

ரிலையன்ஸ் பங்குகள் 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவு!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



