இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிட வேண்டும் என பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,
''கூட்டணி கட்சி விவகாரங்களில் தடையிடுவதில்லை என்பது பாஜகவின் நிலைப்பாடு. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும். அதையே பாஜகவும் விரும்புகிறது.
ஈரோடு இடைத்தேர்தலில் நிறுத்தப்படும் பொது வேட்பாளருக்கு முழு ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளோம். அதிமுக இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டும். திமுகவுக்கு எதிராக அது கூடுதல் பலம் கொடுக்கும்.
இடைத்தேர்தலில் அதிமுக இணைந்து செயல்பட வேண்டும் என ஓபிஎஸ்ஸிடம் தொலைப்பேசி வாயிலாக பேசினேன். அதைத் தொடர்ந்து நேற்று (பிப். 3) நேரிலும் சென்று பேசினோம்.
எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளருக்கு செல்வாக்கு அதிகம் உள்ளதால், அவருக்கு ஆதரவளிப்போம் என ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்டுக்கொண்டேன்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக பிரிந்து இரு அணிகளாக இருந்தால், வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கும்.
அதிமுக சார்பில் ஒரு வேட்பாளரை இரட்டை இலை சின்னத்தில் நிற்கவைத்தால், பாஜக முழுமையாக களப்பணி செய்து வெற்றிபெற உழைக்கத்தயாராக உள்ளது. எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளதால், இன்று மாலைக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்'' என்று குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போராட்டத்தை இணைந்து முன்னெடுப்போம்- மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த ராகுல்!

என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்! - ஹபீபி படத்தைப் பாராட்டிய தனுஷ்!
ஹாலிவுட்டில் பயிற்சி, அம்மாவின் சிபாரிசு... விஜய் நேர்காணல் - 3!

மாட் ரென்ஷா, டிம் டேவிட் அதிரடி: வங்கதேசத்துக்கு 197 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



