ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு கையெழுத்திடும் அதிகாரம்: அதிமுக பொதுக்குழு

இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு தொடர்பான படிவத்தில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட அதிமுக பொதுக்குழு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

News image
அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு கையெழுத்திடும் அதிகாரம்
Updated On :4 பிப்ரவரி 2023, 10:07 am

DIN


சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு தொடர்பான படிவத்தில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட அதிமுக பொதுக்குழு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

சென்னை ராயப்பேட்டையில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அறிவித்த வேட்பாளர் தென்னரசுவை வேட்பாளராக அறிவிக்கவும் அதிமுக பொதுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து, அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன்  தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி அறிவிக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி. இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு செய்வதற்கு தேவையான ஏ, பி படிவத்தில் கையெழுத்திடுவதற்கான அதிகாரம் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு வழங்கி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.