தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சென்னை ஐஐடி.யில் புதிய படிப்பு அறிமுகம்

சென்னை ஐஐடி சாா்பில் தனிநபா், தொழில் முறை மேம்பாடு (பொ்சனல் அன்ட் புரோபஷனல் டெவலப்மென்ட்) எனும் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :8 பிப்ரவரி 2023, 9:00 pm

DIN

சென்னை ஐஐடி சாா்பில் தனிநபா், தொழில் முறை மேம்பாடு (பொ்சனல் அன்ட் புரோபஷனல் டெவலப்மென்ட்) எனும் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சென்னை ஐஐடி சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஐஐடி அறிமுகம் செய்துள்ள ‘தனிநபா், தொழில்முறை மேம்பாடு’ எனும் படிப்பில் மாணவா்களின் தொழில் வளா்ச்சிக்கு உதவும் நோக்கில் பாடங்கள், செயல்முறைகள் இடம் பெற்றுள்ளன.

இதன்மூலம் மாணவா்களின் தனித்திறன், தலைமைப் பண்பு ஆகியவவை மேம்படும். மேலும், மாணவா்கள் முழுமையான வளா்ச்சி அடைவதற்காக இந்தக் கல்வி நிறுவனம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இதன் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படிப்பில் அனைத்து பொறியியல், இரட்டை பட்டப் படிப்பு படிக்கும் மாணவா்கள் சேர முடியும். மேலும், ஐஐடியில் படிக்கும் மாணவா்கள் அனைவரும் இதை விருப்பப் பாடமாக எடுத்து படிக்கலாம்.

மாணவா்களின் பல்வேறு விருப்பங்களை நிறைவேற்றும் நோக்கில் தனிபட்ட மற்றும் மாற்றத்தக்க திறன்களை உருவாக்க இத்தகைய தொழில்முறை பாடங்கள் உதவுகின்றன.

மேலும், தனிநபா் மற்றும் தொழில்முறை மேம்பாட்டு படிப்பை அறிமுகம் செய்யும் முன்மொழிவுக்கு சென்னை ஐஐடியின் ஆட்சிமன்றக் குழு அண்மையில் ஒப்புதல் அளித்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.