சேலம்: ரத்த வெள்ளத்தில் பருப்பு ஆலை காவலாளி! கொலையா? - விசாரணை!
சேலத்தில் தனியார் பருப்பு ஆலையில் காவலாளி ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


சேலத்தில் தனியார் பருப்பு ஆலையில் காவலாளி ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சேலம் அமானி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கையா (52). இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக பள்ளப்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் பருப்பு ஆலையில் காவலராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு ஆலையில் காவலர் பணியில் இருந்த அவர் மர்மமான முறையில் ரத்த வெள்ளத்துடன் சடலமாகக் கிடந்துள்ளார். சடலத்தை பார்த்த பருப்பு மில் உரிமையாளர் பாஸ்கர் உறவினர்களுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சடலத்தை பார்த்த உறவினர்கள் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து பள்ளப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...