தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மாணவிகள் பலி: பிலிப்பட்டி பள்ளிக்கு இன்று விடுமுறை

பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் 4 பேர் நேற்று காவிரி ஆற்றில் முழ்கி பலியான நிலையில், இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :16 பிப்ரவரி 2023, 3:55 am

DIN

புதுக்கோட்டை: பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் 4 பேர் நேற்று காவிரி ஆற்றில் முழ்கி பலியான நிலையில், இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகேயுள்ள பிலிப்பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருந்து விளையாட்டுப் போட்டிகளுக்கு தொட்டியம் சென்று திரும்பிய மாணவிகளில் 4 பேர் புதன்கிழமை மாயனூர் காவிரியாற்றில் குளிக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

நள்ளிரவு கரூரில் இருந்து கொண்டு வரப்பட்ட உடல்கள் இரவே அடக்கம் செய்யப்பட்டன. அமைச்சர் எஸ். ரகுபதி, கரூர் எம்பி ஜோதிமணி, ஆட்சியர் கவிதாராமு உள்ளிட்டோர், மாணவிகளின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து மாநில அரசின் நிவாரண உதவியாக தலா ரூ. 2 லட்சத்தை வழங்கினர்.

இந்த நிலையில் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.